தக்காளிப்பழம் பச்சடி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தக்காளிப்பழம் (நறுக்கிய) - 2

பச்சைமிளகாய் - 5 (கீறிய)

இஞ்சி - ஒரு துண்டு

வெங்காயம் - (கால் பாதி)

உப்பு - தேவையான அளவு

கடுகு - அரை தேக்கரண்டி

சீரகம் - அரை தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

தயிர் - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில்(தாச்சியில்)எண்ணெய் கொதித்ததும் கடுகு, சீரகம், வெங்காயம்(அரைப்பாதி), இஞ்சி பச்சைமிளகாய் தாளிக்கவும்.

இத்துடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கிய பின் இந்த கலவையை சிறிது ஆறவிடவும்

ஆறிய பின்பு தயிர், கறிவேப்பிலை, உப்பு கலந்து பரிமாறவும்.

குறிப்புகள்:

உயிர்சத்து சி நிறைந்த பச்சடி. தக்காளிப்பழம் அலர்ஜி உள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.