தக்கால்பி – கொரியன் ஸ்டைல் ஸ்பைசி சிக்கன்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத கோழி துண்டுகள் - 3/4 கிலோ

ரைஸ் கேக் - 10-15 துண்டுகள்

சில்லி பேஸ்ட் - 3-4 தேக்ரண்டி (காரத்திற்கேற்ப கூட்டி (அ) குறைத்து கொள்ளலாம்)

பெரிய வெங்காயம் - 1

இஞ்சி/பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி

வறுத்த வேர்க்கடலை (கொரகொரப்பாக) பொடி - 1 தேக்கரண்டி

பார்ஸ்லி/பெரில்லா (Perilla) இலைகள் - 5-10

ஸ்ப்ரிங் ஆனியன் (Leek) - 1

முட்டைகோஸ் - 1/2 கிலோ

செய்முறை:

பெரிய வெங்காயம், ஸ்ப்ரிங் ஆனியன் இவைகளை சற்றே பெரிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

சுத்தம் செய்த எலும்பில்லாத கோழிதுண்டுகள், நறுக்கிய பெரிய வெங்காயம், ஸ்ப்ரிங் ஆனியன், வேர்க் கடலை பொடி, இஞ்சி/பூண்டு பேஸ்ட், சில்லி பேஸ்ட் எல்லாவற்றையும் நன்றாக ஒன்றாக கலக்கும் படி செய்து 1/2 மணி நேரம் வைக்கவும்.

முட்டைகோஸை மெல்லிய நீள துண்டுகளாக நறுக்கவும். ஒரு வாயகன்ற பேனில் எண்ணெய் சிறிதளவு தடவி அரிந்த கோஸை பரவலாக வைத்து, பின் அதன் மேல் கோழி கலவை + ரைஸ் கேக்கையும் வைத்து 20-25 நிமிடம் வரை வேக வைக்கவும்.

5 நிமிடத்திற்கொரு முறை கீழும் மேலும் மாறி வருமாறு நன்றாக கிளறி விடவும். முட்டைகோஸ் நன்றாக வெந்து க்ரிஸ்பியாக வரும். கோழி துண்டுகள் வெந்தவுடன் சுவையான தக்கால்பி சாப்பிட தயார்.

சமைத்தபின் மிகவும் காரமாக இருந்தால் சிறிதளவு சீஸ் கலந்து கொள்ளலாம்.

குறிப்புகள்:

கொரியாவில் முதலில் சிக்கன் துண்டுகளை சுவைத்து விட்டு, கடைசியில் உள்ள கிரேவியில் (சில்லிபேஸ்ட், ஆனியன், முட்டைகோஸ் கலவை) ஒரு கப் சாதத்தை கலந்து, சிறிது நேரம் ஸ்ட்வை மீடியம் ப்ளேமில் வைத்து, சாதம் கொஞ்சம் முறுகலானவுடன் சாப்பிடுவார்கள். ரைஸுக்கு மாற்றாக நூடுல்ஸும் சேர்க்கலாம். கொரியாவில் கோழிக்கு தான் ரைஸ், ஆனா நாம (இந்தியாவில்) ரைஸுக்கு கோழிய சாப்பிடுகிறோம்.