டொர்ட்டில்லா (ஸ்பானிய ஆம்லெட்)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முட்டை (மீடியம் அளவு) - 5

உப்பு - தேவையான அளவு

மிளகு - தேவையான அளவு

வெங்காயம் - ஒன்று

உருளைக்கிழங்கு (சிறியது) - 250 கிராம்

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

செய்முறை:

உருளைக்கிழங்கை தோலையுரித்து ஒரு செ.மீ துண்டுகளாக வெட்டவும்.

வெங்காயத்தினை தோலையுரித்து சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்.

அடுப்பில் தாட்சியை(வாணலி) வைத்து அதில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெயை விட்டு சூடாக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வெட்டிய உருளைக்கிழங்கு வெங்காயம், உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றை கலக்கவும்.

அதன் பின்பு எண்ணெய் சூடானதும் அடுப்பின் சூட்டை குறைத்து விட்டு கலந்த பொருட்களை எண்ணெயில் போட்டு ஓரளவு பொரிய(அவிந்ததும்) விடவும். (ஓரளவு மென்மையாக இருக்க 20 நிமிடங்களுக்கு பொரியவிடவும், அதில் 10 நிமிடங்களுக்கு ஒருமுறை தாட்சியை(வாணலியை) குலுக்கவேண்டும் ) .

ஒரு பாத்திரத்தில் எல்லா முட்டைகளையும் போட்டு அதனுடன் உப்பு, மிளகு சேர்த்து முள்ளுகரண்டியால் அடிக்கவும் (மிக அதிகமாக அடிக்ககூடாது ).

உருளைக்கிழங்கும், வெங்காயமும் தேவையானளவு பொரிந்ததும் (அவிந்ததும்) அதை அடித்த முட்டையையுடன் உடனடியாக கலக்கவும் .

அதன் பின்பு முட்டை பொரிக்கும் பாத்திரத்தில் (தாட்சி அல்லது வாணலியில்)மிகுதி எண்ணெயை விட்டு அது கொதித்ததும் கலந்த கலவையை ஊற்றவும்.

அடுப்பின் சூட்டை குறைத்து விட்டு 20 - 25 நிமிடங்கள் வேகவிடவும்.

பின்பு திருப்பி போட்டு 2 நிமிடங்கள் வேகவிடவும். முட்டை வெந்ததும் இறக்கி துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

குறிப்புகள்:

இது செய்வதற்கு இலகுவானதும் சுவையானதுமாகும் இது ஸ்பானிய மக்கள் விரும்பி உண்ணும் உணவாகும். எச்சரிக்கை - இருதய நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்