டேட்ஸ் ப்ரெட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வேகவைத்த பேரீச்சம் பழம் - 10

ப்ரெட் - 4 ஸ்லைஸ்

வெண்ணெய் - கால் தேக்கரண்டி

செய்முறை:

பேரீச்சம் பழத்தின் தோலை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கால் கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். பிறகு அதனை மிக்ஸியில் போட்டு மை போல அரைத்துக் கொள்ளவும்.

அரைத்துவைத்துள்ள பேரீச்சம் பழ பேஸ்ட்டை ப்ரெட் ஸ்லைஸில் தடவவும். மேலே வேறொரு ப்ரெட் ஸ்லைஸ் கொண்டு மூடவும்.

பிறகு ப்ரெட்டின் இருபுறமும் வெண்ணெயை லேசாக தடவி தவாவில் போட்டு இருபுறமும் சிறிது மொறுகவிட்டு எடுக்கவும். தேவையெனில் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளலாம்.

குறிப்புகள்:

குழந்தைகளுக்கான சுவையான மாலை நேர உணவு தயார். பள்ளிக்கும் கொடுத்தனுப்பலாம்.