டெவில்டு எஃக்ஸ்(Deviled Eggs)
தேவையான பொருட்கள்:
முட்டை - 6
மயோனேஸ்(Mayonnaise) - 1/2 கப்
ஜீஜான் மஸ்டார்டு - கடுகுத்தூள்(Dijon Mustard) - 2 தேக்கரண்டி
எலுமிச்சைச் சாறு - 2 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
கடைசியில் அலங்கரிக்க:
பார்ஸிரி இலை அல்லது சைவ்ஸ்(chives) - சிறிதளவு
செய்முறை:
முதலில் முட்டையினை தண்ணீரில் போட்டு வேகவைத்து தோலினை உரித்து வைத்து கொள்ளவும்.
முட்டையினை இரண்டாக வெட்டி நடுவில் உள்ள மஞ்சள் கருவினை தனியாக எடுத்து கொள்ளவும்.
முட்டையின் மஞ்சள் கருவினை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக மசித்து கொள்ளவும்.
பின்னர் மசித்து வைத்துள்ள மஞ்சள் கருவுடன் மயோனேஸ், ஜீஜான் மஸ்டார்டு, எலுமிச்சைச் சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பின்னர் ஒரு ஸ்பூனை வைத்து முட்டையின் வெள்ளை கரு குழியில் கலந்து வைத்துள்ள மஞ்சள் கரு கலவையை சிறிது வைக்கவும்.
இப்படியே அனைத்து முட்டையில் வைக்கவும்.
இதனை தட்டில் வைத்து கடைசியில் பார்ஸிலி இலைகளை பொடிதாக வெட்டி தூவவும்.
செய்த உடன் ப்ரிட்ஜில் வைத்துவிடவும். விருந்தினர்கள் வரும் பொழுது இதனை எடுத்து வைத்து பரிமாறவும்.
மிகவும் சுலபமாக செய்ய கூடியது. அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.