டூனா ஸ்பிரெட்
0
தேவையான பொருட்கள்:
டூனா மீன் - ஒரு கேன்
வெங்காயம் - ஒன்று
பூண்டு - ஒரு பல்
கிரீம் சீஸ் - கால் கோப்பை
சோயா சாஸ் - இரண்டு தேக்கரண்டி
டெரியாக்கி சாஸ் - இரண்டு மேசைக்கரண்டி
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
செலரி சாலட் - அரை தேக்கரண்டி
செய்முறை:
டூனா மீனின் கேனைத் திறந்து அதிலுள்ள நீரை நன்கு சொட்ட வடிகட்டவும்.
பிறகு அதை அரவை இயந்திரத்தில் போட்டு வெங்காயம், பூண்டைச் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு அதனுடன் தேவையான மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து அரைத்து அல்லது கலக்கி குளிர்சாதனப் பெட்டியில் வைத்து ஊறவிடவும்.
அடுத்த நாள் எடுத்து பிரெட்டில் தடவி மத்திய உணவிற்கு சாண்விச் செய்து எடுத்துச் செல்லலாம். மிகவும் சுவையாக இருக்கும்.