டூனா மீன் கட்லெட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

டூனா மீன் - ஒரு டின் முட்டை - இரண்டு வேக வைத்த உருளைக்கிழங்கு - 1 (அ) பொட்டேடோ ப்யூரி பவுடர் - 2 மேசைக்கரண்டி வெங்காயம் பச்சை மிளகாய் - ஒன்று கேரட் - ஒன்று இஞ்சி

பூண்டு - ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி உப்பு

மல்லி தழை - சிறிது எண்ணெய் - பொரிக்க

செய்முறை:

வெங்காயம்

பச்சை மிளகாய்

மல்லி தழை ஆகியவற்றை நறுக்கி வைக்கவும். கேரட் துருவி வைக்கவும். டூனா மீன் டின்னை உடைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

முட்டையை உடைத்து ஊற்றவும். பிறகு எல்லா தூள் வகைகளையும் சேர்த்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம்

பச்சை மிளகாய்

மல்லி தழை

மற்றும் கேரட்டையும் சேர்க்கவும்.

வேக வைத்து மசித்த உருளைக் கிழங்கு (அ) பொட்டேடோ ப்யூரி பவுடர் எல்லாம் சேர்த்து ஒன்றாக பிசைந்து கொள்ளவும்.

பின் வட்டமாக தட்டி சிறிது எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

சுவையான டூனா மீன் கட்லெட் ரெடி.

குறிப்புகள்: