டூனா சாண்ட்விச்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

டூனா மீன் - ஒரு டின் மயோனீஸ் - 2 தேக்கரண்டி வெங்காயம் - ஒன்று (பெரியது) ப்ரெட் - 2

செய்முறை:

வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும். மயோனீஸ் மற்றும் டூனாவையும் எடுத்துக் கொள்ளவும்.

டூனா டின்னை திறந்து அதிலுள்ள தண்ணீரை வடித்துவிட்டு ஒரு பாத்திரத்தில் அதை உதிர்த்து கொள்ளவும்.

அதோடு நறுக்கிய வெங்காயம் மற்றும் மயோனீஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.

ப்ரெட்டை டோஸ்ட் செய்து

இரண்டு ப்ரெட் துண்டுகளுக்கு நடுவில் இந்த கலவையை வைத்து மூடினால் சுவையான

ஆரோக்யமான

எளிதில் தயாரிக்கக்கூடிய சாண்ட்விச் தயார்.

குறிப்புகள்: