டில் கீரை ஃபிலாபில்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெள்ளை கொண்டைக்கடலை - 200 கிராம் தில் கீரை - ஒரு கட்டு கொத்தமல்லி தழை - சிறிது பூண்டு - மூன்று பல் சீரகம் - ஒரு மேசைக்கரண்டி வெள்ளை எள் - 1 1/2 தேக்கரண்டி +1 1/2 தேக்கரண்டி வெங்காயம் - ஒன்று (பெரியது) உப்பு - தேவைக்கு பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி பச்சை மிளகாய் - ஒன்று (பெரியது) ப்ரெட் கிரம்ஸ் - ஒரு மேசைக்கரண்டி

செய்முறை:

கொண்டைக்கடலையை இரவே ஊற வைக்கவும். சீரகம் மற்றும் எள்ளை கருகவிடாமல் வறுத்து வைக்கவும். தில் கீரை மற்றும் சிறிது கொத்தமல்லி தழையை மண்ணில்லாமல் அலசி நறுக்கி வைக்கவும்.

ஊறிய கொண்டைக்கடலையில் வெங்காயம்

பச்சைமிளகாய்

சீரகம்

பூண்டு

பாதியளவு எள்

பேக்கிங் பவுடர்

தில் கீரை

கொத்தமல்லி தழை சேர்த்து முக்கால் பதத்துக்கு அரைக்கவும்.

அரைத்த கலவையில் மீதி உள்ள எள்

பிரெட் க்ரம்ஸ்

உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

எண்ணெயை காய வைத்து

கலவையை உருட்டி வடைக்கு தட்டுவது போல் நன்கு தட்டாமல் லேசாக தட்டி போட்டு பொரிக்கவும்.

மறுபுறம் திருப்பி போட்டு நல்ல கிரிஸ்பியானதும் எண்ணெயை வடித்து எடுக்கவும்.

சுவையான தில் கீரை ஃபிலாஃபில் ரெடி. இதை ஹமூஸ்

குபூஸுடன் சேர்த்து சாண்ட்விச் போல சாப்பிட அருமையாக இருக்கும்.

குறிப்புகள்: