டின் மீன் ப்ரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மீன் டின் - ஒன்று வெங்காயம் - ஒன்று (பெரியது) மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 3 தேக்கரண்டி

செய்முறை:

தேவையானவற்றை எடுத்து வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும்.

மீன் டின்னை திறந்து அதிலுள்ள தண்ணீரை கொட்டிவிட்டு

மீனில் உள்ள முள்ளை எடுத்துவிட்டு சுத்தம் செய்து உப்பு

மிளகாய் தூள் போட்டு 10 நிமிடம் வைக்கவும்.

கடாய் சூடானதும் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு அதில் மீன் துண்டுகளை போட்டு மூடி வைக்கவும். (மீனில் தண்ணீர் இருப்பதால் வெடிக்கும்). அடுப்பை உயர்தீயில் வைக்கவும்.

மீன் ஒரு பக்கம் பொரிந்ததும்

அடுப்பை அணைத்துவிட்டு அரை நொடி அப்படியே விட்டு பின் மீனை மெல்ல திருப்பவும். (அவசரப்பட்டால் மீன் உடைந்துவிடும்)

மீனின் அடுத்த பக்கமும் பொரிந்த பின் வெங்காயத்தை போட்டு குறைந்த தீயில் விட்டு மூடி வைக்கவும்.

2 நிமிடம் விட்டு

அடுப்பை அணைத்துவிட்டு

மீனோடு வெங்காயத்தை சேர்த்து (மீன் உடையாதவாறு) மெல்ல கிளறி விடவும் (வெங்காயம் பொரியக்கூடாது

வெந்தால் போதும்).

சுவையான

எளிமையான டின் மீன் பொரியல் தயார்.

குறிப்புகள்: