டயாபெட்டீஸ் தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆட்டாமா (கோதுமைமா) - 250கிராம்

கேழ்வரகுமா - 100கிராம்

அரிசி மா - 50கிராம்

ரவை - 50கிராம்

சின்ன வெங்காயம்(குறுனியாக வெட்டியது)- 150கிராம்

சின்ன சீரகம்( சீரகம்) - தேவையானளவு

உப்பு - தேவையானளவு

பச்சைமிளகாய்(குறுனியாக வெட்டியது) - சிறிதளவு

கறிவேப்பிலை(குறுனியாக வெட்டியது) - சிறிதளவு

கொத்தமல்லி(மல்லி)இலை - சிறிதளவு

தண்ணீர் - தேவையானளவு

மிளகாய்த்தூள் - தேவையானளவு(விரும்பினால்)

செய்முறை:

ஆட்டாமா(கோதுமைமா), கேழ்வரகுமா, அரிசிமா, ரவை ஆகியவற்றை தண்ணீர் விட்டு தோசை மா பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.

கலக்கி வைத்துள்ள மாவுடன் சின்ன வெங்காயம், சின்ன சீரகம், உப்பு, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், கொத்தமல்லி இலை, மிளகாய்த்தூள் இவையாவற்றையும் கலக்கவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அது சூடானதும் தோசைகல்லில் எண்ணெய் தடவி அதில் கலக்கி

வைத்த மாவை மெல்லிய தோசையாக ஊற்றவும். ஊற்றிய தோசை நன்கு சிவந்து மொறுமொறுப்பாக விடவும்.

தோசை மொறுமொறு பாகியதும் டயாபெட்டீஸ் தோசை தயாராகி விடும். அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

அதன் பின்பு டயாபெட்டீஸ் தோசையை வெங்காய சட்னியுடன் பரிமாறவும்.

குறிப்புகள்:

சர்க்கரை நோயளருக்கு மிக மிக சிறந்த தோசை டயாபெட்டீஸ் தோசை ஆகும். டயாபெட்டீஸ் தோசையில் சர்க்கரை நோயளருக்கு தேவையான சத்துக்கள் யாவும் நிறைந்ததுள்ளது. கவனிக்க வேண்டிய விஷயங்கள் - ஆட்டாமா(கோதுமைமா), கேழ்வரகுமா, அரிசிமா, ரவை ஆகியவற்றை தண்ணீர் விட்டு தோசைமா பதத்திற்கு கரைத்து கொள்ளவும். ஊற்றிய தோசை நன்கு சிவந்து மொறுமொறுப்பாக விடவும். எச்சரிக்கை - அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.