டயட் சிக்கன்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் - அரை கிலோ வெங்காயம் - 300 கிராம் வரமிளகாய் - 20 கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி எண்ணெய் - தாளிக்க உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும். சிக்கனை சுத்தம் செய்துக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வரமிளகாயை கிள்ளி வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம்

கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.

அத்துடன் சிக்கன்

மஞ்சள் தூள் மற்றும் உப்புச் சேர்த்து கிளறவும்.

நன்கு கிளறிவிட்டு மூடி போட்டு 15 நிமிடங்கள் வேக வைக்கவும். (தண்ணீர் சேர்க்கக் கூடாது. மூடி வேக வைப்பதால் தண்ணீர் அதிலேயே வந்துவிடும்).

15 நிமிடங்கள் கழித்து அடுப்பை சிறு தீயில் வைத்து மூடியைத் திறந்து மேலும் 10 நிமிடங்கள் (தண்ணீர் வற்றும் வரை) வைத்திருந்து இடையிடையே கிளறிவிட்டு சிக்கன் வெந்ததை சரிபார்த்து இறக்கவும்.

சுவையான மசாலா அதிகம் சேர்க்காத டயட் சிக்கன் தயார்.

குறிப்புகள்: