டயட் சாலட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காரட் - 1

வெள்ளரிக்காய் - 1

ஆப்பிள் - 1

லெட்டியூஸ் இலை - 2 எண்ணம்

வால் நட்ஸ் - 6 எண்ணம்

செய்முறை:

காரட், வெள்ளரி, ஆப்பிள் (தோலுடன்)லெட்டியூஸ் ஆகியவற்றை சிறியதாக நறுக்கவும்.

வால்னட் (சேவல் கொண்டை போல் இருக்கும்)பொடியாக கட் பண்ணவும்.

எல்லாவற்றையும் மிக்ஸ்செய்து அப்படியே ப்ளைன் ஆக சாப்பிட்டாலே நன்றாக இருக்கும்.

குறிப்புகள்:

பார்ட்டிகளில் கூட இதனை வைத்தால் எல்லோரும் பிரியமாக சாப்பிடுவார்கள். காரட்,வெள்ளரியுடன், ஆப்பிளின் இலேசான புளிப்பு சேர்ந்து கறுக்மொறுக் என்று சூப்பராக இருக்கும். இந்த வால்னட் இதயத்திற்கு நல்லது. கிடைத்தால் சேர்த்துக்கொள்ளலாம்.