ஜுஜுப்ஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சீனி - 250 கிராம்

ஜெலற்றீன் - 20 கிராம் (3மேசைகரண்டி மட்டமாக)

சிட்ரிக் அமிலம் - அரை தேக்கரண்டி

(நன்கு)கொதித்த தண்ணீர் - தேவையான அளவு

தண்ணீர் - 10 மேசைக்கரண்டி (அரை டம்ளர்)

கலரிங் (விரும்பியது) - ஒரு தேக்கரண்டி

சீனி - 4 மேசைக்கரண்டி

மாஜரீன் (தட்டுக்கு பூச) - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

ஒரு கப்பில் ஜெலற்றீனை போட்டு அதனுடன் 10 மேசைக்கரண்டி(அரை டம்ளர்) நன்கு கொதித்த தண்ணீர் விடவும்.

அதன் பின்பு அதை நன்றாக கொதித்த தண்ணீர் உள்ள இன்னொரு பாத்திரத்தில் அமிழ்த்தி வைத்து கொண்டு ஜெலெற்றீன் முற்றாக கரையும் வரை நன்றாக கரைத்து அப்படியே கொதி நீர் உள்ள பாத்திரத்தினுள் வைக்கவும்.

அடுப்பில் தாட்சியை வைத்து சூடாக்கி அதில் சீனியை போட்டு அதனுடன் தண்ணீர் விட்டு காய்ச்சவும்.

பாகு காய்ச்சும்போது சீனி முழுவதும் கரைந்து வெளுப்பான நுரைபதம் தோன்றி மறைந்து பாகு கொதிக்கும் பதத்தை அடைந்ததும் ஒரு குளிர்நீர் கொண்ட பாத்திரத்தில் சிறிதளவு இப்பாகை விட்டு பார்க்கும் போது நீரில் கரையாமல் தண்ணீரில் பாகு தெரியும்.

பதத்தை அடைந்ததும் (தொட்டு பார்க்கும் போது கையில் பசை போல ஒட்டும்) தாட்சியை உடனே அடுப்பிலிருந்து இறக்கவும்.

பின்பு சூடாக இருக்கும் போது அதனுடன் கலத்து வைத்துள்ள ஜெலற்றீன், கலரிங், சிட்ரிக் அமிலம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். அதன் பின்பு ஒரு தட்டு முழுவதும் மாஜரீன் பூசவும்.

மாஜரீன் பூசிய தட்டில் செய்த கலவையை ஊற்றி 12 மணித்தியாலம் வைத்த பின்பு 1/2"தர 1/2" அளவான துண்டுகளாக ஒரு கூரான கத்தியால் கீறிக் கொண்டு ஒரு மாஜரீன் பூசிய கரண்டியால் ஒவ்வொரு துண்டுகளையும் தூக்கி எடுத்து சீனியில் பிரட்டிய பின் பரிமாறவும்.

குறிப்புகள்:

சிறுவர் முதல் பெரியவர் வரை இலகுவாக உண்ண கூடியதும் சுவையானதுமான ஒர் இனிப்பே ஜுஜுப்ஸ் ஆகும். அத்துடன் ஜுஜுப்ஸ் இலங்கை மக்கள் மிக மிக விரும்பி உண்ணும் ஒர் இனிப்பு. எச்சரிக்கை - சர்க்கரை நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். கவனிக்க வேண்டிய விஷயங்கள் - ஒரு கப்பில் ஜெலற்றீனை போட்டு அதனுடன் 10 மேசைக்கரண்டி (அரை டம்ளர்)நன்கு கொதித்த தண்ணீர் விட்டு நன்றாக கொதித்த தண்ணீர் உள்ள இன்னொரு பாத்திரத்தில் அமிழ்த்தி வைத்து கொண்டு ஜெலெற்றீன் முற்றாக கரையும் வரை நன்றாக கரைத்து அப்படியே கொதிநீர் உள்ள பாத்திரத்தினுள் வைக்கவும். தொட்டு பார்க்கும் போது கையில் பசை போல ஒட்டும்.