ஜிஞ்சர் மோர்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தயிர் - 2 கப்

தண்ணீர் - ஒரு கப்

ஜஸ்கட்டி(சிறியது) - 6

உப்பு - தேவையான அளவு

இஞ்சி துண்டு - ஒன்று

கொத்தமல்லிஇலை(பொடியாக நறுக்கியது) - சிறிதளவு

அல்லது

கறிவேப்பிலை (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு

பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை:

ஒரு பலகையில் இஞ்சியை வைத்து அதன் தோலை கத்தியால் வெட்டி அகற்றிய பின்பு அதனை சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு சிறிய பாத்திரத்தில் வைக்கவும்.

கழுவி சுத்தம் செய்து நறுக்கிய கொத்தமல்லி இலை அல்லது கறிவேப்பிலையை ஒரு சிறிய பாத்திரத்தில் வைக்கவும்.

பின்பு கிரைண்டரில்(மிக்ஸி)அல்லது அம்மியில் இஞ்சிதுண்டுகள், கறிவேப்பிலை அல்லது கொத்தமல்லி இலை ஆகியவற்றை போட்டு நன்றாக(மைய) அரைக்கவும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் தயிரை போட்டு அதனுடன் தண்ணீர் விட்டு நன்றாக கரைக்கவும்.

கரைத்த கலவையுடன் அரைத்த இஞ்சிகறிவேப்பிலை அல்லது கொத்தமல்லிஇலை(மையஅரைத்த)விழுது உப்பு, ஜஸ்கட்டி, பெருங்காயம் ஆகியவற்றை போட்டு கலக்கவும்.

கலக்கிய இக்கலவையே ஜிஞ்சர்மோர் (இஞ்சி மோர்) ஆகும். ஜிஞ்சர் மோர்(இஞ்சி மோரை) அழகான கப்பில் ஊற்றி பரிமாறவும்.

குறிப்புகள்:

இஞ்சியில்(ஜிஞ்சர்)கொழுப்பு, புரதம், தாதுக்கள், கல்சியம், பொஸ்பரஸ், இரும்பு, மக்னீஸியம், நார்ச்சத்து, விற்றமின் C கார்போஹைட்ரேட் ஆகிய சத்துகள் அடங்கியுள்ளது. அத்துடன் இஞ்சி(ஜிஞ்சர்) முக்கிய நறுமண அல்லது பலசரக்கு பொருள் ஆகும். இது ஒரு மருத்துவமூலிகையும் ஆகும். இஞ்சியை(ஜிஞ்சர்)உண்பதால்தீரும் நோய்களாவன பசியின்மை, செரியாமை, வயிற்றுப்பொருமல் தொண்டைக்கம்மல் ஆகும் அத்துடன் இது நல்ல ஜீரணத்தை தரக்கூடியது இப்படிப்பட்ட இஞ்சியுடன் தயிரும் சேர்ந்தால் இது மிக மிக சுவையுடன் காணப்படும். ஜிஞ்சர் மோர் செய்து குடித்து இதன் பலனை அறியவும், ஜிஞ்சர் மோர் இலங்கையில் வெயில் காலங்களுக்குரிய பிரபல்யமான பானம் அத்துடன் இது ஒருவகை குளிர்மையான பானம். இந்த மோரை நீங்கள் குடித்தால் உங்கள் உடலில் உணவு சமிபாடடையும் சக்தி அதிகரிக்கும். ஜிஞ்சர் மோர் சுவையானதும் சத்துகள் நிறைந்ததுமாகும்.

எச்சரிக்கை -

அஸ்துமா நோயாளர், சர்க்கரைநோயாளர், இருதய நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி மோர் அருந்தவும்.