ஜாப்பனீஸ் ஃப்ரைட் ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 1 கப்

பட்டாணி - 1 கப்

துருவிய காரட் - 2 tbsp

முட்டை - 2

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/2 cup

வெண்ணை - 1 1/2 tbsp

சோயா சாஸ் - 2 tbsp

உப்பு, மிளகு தூள் - தேவையான அளவு

செய்முறை:

இரண்டு கப் தண்ணீரை கொதிக்கவிட்டு அரை மணி நேரம் ஊறவைத்த அரிசி மற்றும் சிறதளவு உப்பு சேர்த்து மூடி வைத்து தீயை குறைத்து வைக்கவும்.

மிதமான தீயில் 20 நிமிடம் வைத்து வேறு ஒரு பெரிய பாத்திரத்தில் கொட்டி ரெஃப்ரிஜிரெட்டரில் உடனே வைக்கவும்.

சாதம் உள்ளயே ஆற வேண்டும். சாதம் நன்றாக ஆறியதும் (சில்லென்று ஆகா கூடாது) வெளியே எடுத்து விடவும்.

முட்டையை பொரித்தெடுக்கவும். பொரிக்கும் போதே சிறு சிறு பட்டாணி அளவு வரும்மாறு கிளறவும்.

இப்பொழுது சாதத்துடன் பட்டாணி, காரட், முட்டை மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.

வெண்ணையை சூடாக்கி அதில் கலந்து வைத்துள்ள சாதத்தை கொட்டி சோயா சாஸ், தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்க்கவும்.

அடுப்பில் 6-8 நிமிடம் இருக்கவேண்டும். நடுநடுவே கிளறி விடவும்.

அடுப்பை அனைத்து சாதத்தை எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

இது இங்கே பென்னிஹானா என்கிற ஜப்பானியர்கள் உணவகத்தில் கிடைக்கும் சுவை.