சோயா முறுக்கு
0
தேவையான பொருட்கள்:
சோயா மா - 4 கப்
அரிசி மா - ஒரு கப்
உளுத்தம்மா (வறுத்த) - ஒரு மேசைக்கரண்டி
நெய் அல்லது பட்டர் - கால் கப்
சீரகம் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
எண்ணெய் - தேவையானளவு
எள் - ஒரு மேசைக்கரண்டி
செய்முறை:
நெய் அல்லது பட்டரை லேசாக சூடாக்கி அதனுடன் சோயாமா, அரிசிமா, உளுத்தம்மா, உப்பு, சீரகம், எள் சேர்த்து பிசைந்து (குழைத்து) கொள்ளவும்.
முறுக்கு உரலில் அச்சு போட்டு குழைத்தவற்றை அதில் நிரப்பவும்.
வாணலியில் (தாச்சியில்) எண்ணெய் விட்டு சூடாக்கி அதில் முறுக்கு உரலில் உள்ள மாவை பிழிந்து பொன் நிறமாக பொரித்து எடுக்கவும் .
குறிப்புகள்:
பாடசாலை விடுமுறை காலங்களில் சிறுவர்கள் உண்ண சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு. இதயநேயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.