சோயா சாஸ் சிக்கன்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் - ஒரு கிலோ (சதைப்பகுதி மட்டும்) சோயா சாஸ் - 3 - 4 மேசைக்கரண்டி பச்சை மிளகாய் - 5 இஞ்சி

பூண்டு விழுது - 2 தேக்கரண்டி மிளகு - ஒன்றரை தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

செய்முறை:

தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும். இஞ்சி

பூண்டு விழுதுடன் மிளகு

பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். (காரத்திற்கேற்ப மிளகு மற்றும் பச்சை மிளகாயின் அளவை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ சேர்த்துக் கொள்ளலாம்).

அரைத்தவற்றை சிக்கனுடன் சேர்த்து பின் சோயாசாஸ்

உப்பு சேர்த்து பிரட்டி ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். (சாஸில் உப்பு இருப்பதால் உப்பு சேர்க்கும் போது கவனமாக இருக்கவும்).

கடாயில் ஊறவைத்த சிக்கனைப் போட்டு வேகவிடவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. சிக்கனில் இருக்கும் நீரே போதுமானது. சிக்கன் நன்கு வெந்து தண்ணீர் நன்றாக வற்றியதும். வேறு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.

பின் அதே கடாயை அடுப்பில் வைத்து

எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலையை நன்கு பொரியவிட்டு

வேக வைத்த சிக்கனை சேர்த்து 10 நிமிடங்கள் மெல்லிய தீயில் பிரட்டி இறக்கவும்.

சுவையான சோயா சாஸ் சிக்கன் தயார். ஃப்ரைட் ரைஸ்

ரச சாதத்திற்கு நன்றாக இருக்கும்.

குறிப்புகள்: