சோயா இடியப்பம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சோயா - ஒரு கப்

உப்பு - தேவையானளவு

தண்ணீர் - தேவையானளவு

எண்ணெய் - ஒரு தேக்கரண்டி

தேங்காய்துருவல் - தேவையான அளவு

உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி

கறிவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை:

முதல் நாள் இரவு ஒரு பாத்திரத்தில் சோயாவில் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும்(சோயாவை விட தண்ணீர் கூடுதலாக இருக்கவேண்டும்).

அடுத்தநாள் காலையில் ஊறியசோயாவை நன்றாக கழுவி அதனை கிரைண்டரில்

(மிக்ஸியில்) போட்டு அதனுடன் சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து இட்லி பதத்திற்கு அரைத்தெடுக்கவும்.

அதன் பின்பு அடுப்பில் இட்லி பானையை வைத்து அதில் தண்ணீர் விட்டு அதன் மேல் பாத்திரத்தை வைத்து அதனுள் இட்லி தட்டினை வைத்து சூடாக்கவும்.

இட்லிதட்டு சூடானதும் இட்லி தட்டினை வெளியே எடுத்து சிறிதளவு எண்ணெய் தடவி அரைத்தமாவை போட்டு இட்லி பதத்திற்கு வேகவிடவும்.

வெந்த இட்லியை இடியப்ப உரலில் போட்டு இடியப்பதட்டில் பிழிந்தால் சோயா இடியப்பம் தயாராகி விடும்.

தயாரான இடியப்பத்தினை பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். பின்பு அடுப்பில் தாட்சியை (வாணலி) வைத்து சூடானதும் அதில் ஒரு தேக்கரண்டி எண்ணெய்

விட்டு சூடாக்கவும்.

எண்ணெய் சூடானது கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து உப்பு, தேங்காய்துருவல் போட்டு வதக்கி செய்துவைத்துள்ள இடியப்பத்தின் மேல் தூவி சாப்பிடலாம். அல்லது ஏதாவது குருமாவுடன் தொட்டு சாப்பிடலாம்.

குறிப்புகள்:

சோயா இடியப்பம் சுவையானதும் எல்லோராலும் விரும்ப கூடியதும் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை தேவைப்படும் சகல சத்துகள் நிறைந்ததும் போஷாக்கு உள்ளதுமான ஒர் உணவு ஆகும். கவனிக்க வேண்டிய விசயங்கள் - இட்லி பதத்திற்கு அரைத்தெடுக்கவும், இட்லி பதத்திற்கு வேகவிடவும். எச்சரிக்கை -சோயா அலர்ஜி உள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். மாற்று முறை - ஏதாவது குருமாவுடன் தொட்டு சாப்பிடலாம்.