சோயாபீன் மில்க்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சோயா பீன்ஸ் - 3/4 கப் (வெள்ளை கலர்)

சீனி - தேவையான அளவு

செய்முறை:

சோயா பீன்ஸை முந்தினம் இரவே ஊறவைக்க வேண்டும். காலையில் அந்த பீன்ஸை கழுவி தண்ணீரை வடித்து விட்டு வேறு பாத்திரத்தில் குறைவான தண்ணீரில் பீன்ஸை வேகவைக்க வேண்டும்.

பீன்ஸ் வெந்ததும் மிக்ஸியில் எல்லாவற்றையும் போட்டு ஒரு முறை கிரைண்ட் பண்ணவும், பிறகு தேவையான அளவு சீனி சேர்த்து பருக வேண்டும்.

குளிரவைத்து குடிக்க விரும்புவர்கள் ஃப்ரிஜ்ஜில் வைத்து பருகவும்.

குறிப்புகள்:

சோயா பால் மிகவும் உடலுக்கு நல்லது, இது எலும்பை நல்ல பலப்படுத்தும், சோயா புரதச்சத்து நிறைந்தது அதனால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. சோயாவில் பல வகை உள்ளது. சோயாவில் இருந்து சாஸ், டோபு தயாரிக்கின்றனர் மற்றும் சிலவகை சோயா மருத்துவரீதியாகவும் பயன்படுத்துகின்றனர். சோயா பாலை சூடாக குடிப்பது நல்லது, குளிர வைத்து குடிப்பதலாம் சளி பிடிக்கும் வாய்ப்புள்ளது. சோயா பீன்ஸ் பார்க்க வெள்ளைகலரில் பட்டாணிப்போல் உருண்டையாக இருக்கும் ஊறவைத்தப்பின் அது நீளவாக்கில் வரும், சோயாவில் பல வகை உள்ளது, ஆனால் பால் செய்ய இந்த வெள்ளைகலர் மிகவும் நல்லது.