சோத்தோ அயாம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி - அரை கிலோ வேக வைத்த ரைஸ் நூடுல்ஸ் - 100 கிராம் முட்டைகோஸ் - 50 கிராம் வேக வைத்த முட்டை - 4 திக் சோயா சாஸ் (ஸ்வீட் சோயா சாஸ்) - 4 தேக்கரண்டி கஃபிர் எலுமிச்சை இலை - 2 (சாதாரண எலுமிச்சை இலை பயன்படுத்தலாம்) சலாம் இலை - 2 (கிடைக்கவில்லை என்றால் தவிர்க்கலாம்) லெங்குவாஸ் (ஃப்ரெஷ் சித்தரத்தை) - 2 அங்குலத் துண்டு லெமன் கிராஸ் - 2 எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி உப்பு - தேவையான அளவு சிறிய எலுமிச்சை - 2 சர்க்கரை (சீனி) - கால் தேக்கரண்டி அரைக்க 1: சின்ன வெங்காயம் - 5 பூண்டு - 4 (அ) 5 பல் இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு ஃப்ரெஷ் மஞ்சள் - அரை அங்குலத் துண்டு (மஞ்சள் தூள் பயன்படுத்தலாம்) தனியா விதை - ஒரு தேக்கரண்டி மிளகு - ஒரு தேக்கரண்டி கேன்டில் நட் - 2 (கிடைக்கவில்லை என்றால் தவிர்க்கலாம்) அரைக்க 2: பச்சை மிளகாய் - 7 (அ) 8 சின்ன வெங்காயம் - 4 பூண்டு - ஒரு பல் உப்பு - தேவையான அளவு சர்க்கரை (சீனி) - கால் தேக்கரண்டி

செய்முறை:

மிக்ஸியில் அரைக்க 1 ல் கொடுத்துள்ளவற்றை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி அரைத்த கலவையை சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.

வதங்கியதும் 4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதி வந்ததும் சுத்தம் செய்த கோழித் துண்டுகளைச் சேர்க்கவும். அதனுடன் எலுமிச்சை இலைகள் மற்றும் சலாம் இலைகளை கையால் லேசாக கசக்கி சேர்க்கவும். லெமன் கிராஸில் வெளியே உள்ள இரு இதழ்களையும் எடுத்து விட்டு தடிமனான அடிப்பகுதியை வெட்டிவிட்டு லேசாக இடித்து சேர்க்கவும். லெங்குவாசை தோல் நீக்கிவிட்டு இடித்துச் சேர்க்கவும். பின் உப்பு சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும்.

கோழித் துண்டுகள் வெந்ததும் சூப்பை வடிகட்டி கோழித் துண்டுகளை தனியாக எடுத்து எலும்பு நீக்கி சிறு துண்டுகளாக உதிர்த்து வைக்கவும்.

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் அரைக்க 2 ல் கொடுத்துள்ள பொருட்களில் சர்க்கரை தவிர மற்றவற்றைச் சேர்த்து வேக வைக்கவும். ஆறியதும் தண்ணீரை வடித்துவிட்டு சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

பரிமாறும் கிண்ணத்தில் ஒரு கையளவு வேக வைத்த ரைஸ் நூடுல்ஸ் போட்டு

அதன் மீது ஒரு மேசைக்கரண்டி மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிய முட்டைகோஸ்

ஒன்றரை மேசைக்கரண்டி உதிர்த்த கோழித் துண்டுகள் போட்டு வேக வைத்து பாதியாக நறுக்கிய முட்டையை வைக்கவும். அதன்மேல் ஒரு தேக்கரண்டி அளவு ஸ்வீட் அல்லது திக் சோயா சாஸை பரவலாக ஊற்றவும்.

அதன்மீது வடிகட்டி வைத்திருக்கும் சூடான சூப்பை ஊற்றி

அரைத்த பச்சை மிளகாய் மற்றும் எலுமிச்சம் பழத்துடன் பரிமாறவும். அவரவர் காரத்திற்கேற்ப பச்சை மிளகாய் கலவையும் எலுமிச்சம் பழச்சாறும் கலந்து சாப்பிடலாம். தேவைப்பட்டால் மேலும் சிறிதளவு ஸ்வீட் சோயா சாஸும் ஊற்றிக் கொள்ளலாம்.

குறிப்புகள்: