சொக்லெற் பிஸ்கற் புடிங்
தேவையான பொருட்கள்:
ஏதாவதொரு சொக்லெற் பிஸ்கற் - 1 1/2
கொக்கோ பவுடர் - 2 மேசைக்கரண்டி
கன்டென்ஸ்ட் மில்க் - 1 ரின்
வனிலா எஸன்ஸ் - 1 தேக்கரண்டி
பொடித்த கஜு + பேரீச்சம் பழம் - 1/4 கப்
செய்முறை:
சொக்லெற் பிஸ்கற்றை தூளாக்கி வைக்கவும்.
ஒரு பட்டர் பூசிய பேக்கிங் தட்டில் கால்வாசி பிஸ்கற் தூளை பரப்பி வைக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதனுள் இன்னொரு சிறிய பாத்திரத்தை வைத்து அதனுள் கன்டென்ஸ்ட் மில்க் , அரவாசி பிஸ்கட் தூள், கொக்கோ பவுடர், வனிலா எஸன்ஸ் மூன்றையும் போட்டு கலந்து கொதிக்க விடவும்.
கலவை ஓரளவு தடித்ததும் அதனை பிஸ்கட் பரப்பிய தட்டில் ஊற்றி சமமாக பரவவும்.
அதன் மேல் மீதி கால்வாசி பிஸ்கற் தூளை பரவி அதன் மேல்பொடித்த கஜு, பேரீச்சம் பழம் தூவி ஃபிரிட்ஜில் வைத்து இறுக விடவும்.
சொக்லெற் பிஸ்கற் புடிங் தயார். இதனை தேவைப்படும் போது வெளியே எடுத்து துண்டுகளாக்கி பரிமாறவும்