சொக்லெட் ஸுவிஸ் றோல் (Chocolate swiss Roll)
தேவையான பொருட்கள்:
கோதுமை மா (மைதா)- 1 1/2 கப்
சீனி - 3/4 கப்
பால் - 1 கப் (அல்லது பால் 3/4 கப் தண்ணீர் 1/4 கப் சேர்த்து)
கொக்கோ பவுடர் - 2 மேசைக்கரண்டி
சோளமா - 1 மேசைக்கரண்டி
பட்டர் - 1/2கப்
பேகிங் சோடா - 1 1/2தேக்கரண்டி
உப்பு - 1/4 டீஸ்பூன்
சொக்லெட் ஐஸிங் - 1/2கப்
நீள்சதுர கேக் பான் - 1
பேகிங் ஸ்பிரே
சொக்லெட் ஐஸிங்கிற்கு:
---------------------
கொக்கோ பவுடர் - 1 1/2 மேசைக்கரண்டி
ஐஸிங் சுகர் - 1 1/2 கப்
பட்டர் /கிறிஸ்கோ - 1/3 கப்
தண்ணீர் - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
கேக் பானிற்கு பேகிங் ஸ்பிரே தடவி வைக்கவும்.
அவனை 350 F இல் முன்சூடு பண்ணவும்.
கோதுமை மா, கொக்கோ பவுடர், உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து 3 - 4 தடவை அரிக்கவும் (சலிக்கவும்)
சீனி, உருக்கிய பட்டர், சோளமா கரைசல் சேர்த்து கிரைண்டரில் நன்கு அடிக்கவும்.
பின்னர் பாலை சேர்த்து அடிக்கவும்.
பின்னர் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் இந்த கலவையை போட்டு அதனுள் மாவை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும். (அடிக்க வேண்டாம்)
பின்னர் இந்த கலவையை கேக் பானில் மெல்லிய படையாக(1/2" தடிப்பில்)ஊற்றி 350 Fஇல் 15 - 20 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.
வெந்த கேக்கை ஒரு வலைத்தட்டில் போட்டு அல்லது பேக்கிங் பானுடனேயே வைத்து நன்கு ஆற விடவும்.
கொக்கோ பவுடர், ஐஸிங் சுகர் , பட்டர் /கிறிஸ்கோ, தண்ணீர் எல்லாவற்றையும் சேர்த்து பீற்றரால் (beater) நன்கு கிறீமாகும் வரை அடிக்கவும்.
பின்னர் ஒரு பாச்மென்ட் அல்லது டிஸ்யூ பேப்பரில் கேக்கை வைத்து 4 கரைகளையும் வெட்டி விடவும்.
பின்னர் கேக்கின் மேல் சொக்லெட் கிறீம் ஐஸிங்கை மெல்லிய படையாக பூசி இறுக்கமாக உருட்டவும்.
பின்னர் உருட்டிய கேக்கை பாச்மென்ட் அல்லது டிஸ்யூ பேப்பரில் வைத்து மீண்டும் உருட்டி ஃபிரிட்ஜில் 2 மணித்தியாலங்களுக்கு வைக்கவும்.
சுவையான சொக்லெட் ஸுவிஸ் றோல் தயார். விரும்பினால் சொக்லெட்டை உருக்கி பூசி அலங்கரித்து பரிமாறலாம்.
குறிப்புகள்:
கேக் 1/2 அங்குல தடிப்பிலு குறைவாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் கூடக் கூடாது. கூடினால் உருட்டும் போது உடையப் பார்க்கும். தடிப்பு கூடி விட்டால் அதை அரைவாசியாக நடுவால் வெட்டி விடவும். அப்படியும் உடையும் போல் தெரிந்தால் நன்கு இறுக்கமாக சுற்றி பேப்பராலும் இறுக்கமாக சுற்றி ஃபிரிட்ஜில் வைக்கவும்.