சொக்லெட் கேக் (Chocolate Cake)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமை மா (மைதா)- 1 1/2 கப்

சீனி - 3/4 கப்

பால் - 1 கப் (அல்லது பால் 3/4 கப் தண்ணீர் 1/4 கப் சேர்த்து)

கொக்கோ பவுடர் - 2 மேசைக்கரண்டி

பொடித்த கஜு - 1/4 கப் (விரும்பினால்)

ரெய்சின் - 25 (விரும்பினால்)

பட்டர் - 1/2கப்

பேகிங் சோடா - 1 1/2தேக்கரண்டி

உப்பு - 1/4 டீஸ்பூன்

8" கேக் பான் - 1

பேகிங் ஸ்பிரே

செய்முறை:

கேக் பானிற்கு பேகிங் ஸ்பிரே தடவி வைக்கவும்.

அவனை 350 F இல் முன்சூடு பண்ணவும்.

கோதுமை மா, கொக்கோ பவுடர், உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து 3 - 4 தடவை அரிக்கவும் (சலிக்கவும்)

சீனி, உருக்கிய பட்டர் சேர்த்து கிரைண்டரில் நன்கு அடிக்கவும்.

பின்னர் பாலை சேர்த்து அடிக்கவும்.

பின்னர் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் இந்த கலவையை போட்டு அதனுள் மாவை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும். (அடிக்க வேண்டாம்)

பின்னர் பொடித்த கஜு, ரெய்சின் சேர்த்து கலக்கவும்.

பின்னர் இந்த கலவையை கேக் பானில் ஊற்றி 350 Fஇல் 30 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.

சுவையான சொக்லெட் கேக் தயார். விரும்பினால் சொக்லெட் ஐஸிங் பூசி அலங்கரித்து பரிமாறலாம்.

குறிப்புகள்:

பால் குளிராக இருந்தால் சிறிது சூடாக்கி பின்னர் பாவிக்கவும்.