சைனீஸ் ஸ்பிரிங் ரோல்(சைவம்)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஸ்பிரிங் ரோல் ஷீட்(spring roll sheet) - 15

முட்டைகோஸ் - 1/4 கப் (மெலிதாக நறுக்கியது)

கேரட் - 1/4 கப் (துருவியது)

காளான் - 1/4 கப்(மெலிதாக நறுக்கியது)

சின்னவெங்காயம் - 5(பொடியாக நறுக்கியது)

பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)

இஞ்சி - 1 சிறுதுண்டு(பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)

வெங்காயத்தாள் - 2 தேக்கரண்டி(பொடியாக நறுக்கியது)

வெள்ளை மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி (கறுப்புமிளகுதூளும் சேர்க்கலாம்)

சோயா சாஸ் - 1/4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

சீனி - 1/4 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிப்பதற்கு

ஓரங்களை ஒட்ட:

மைதா - 1 மேசைக்கரண்டி

தண்ணீர் - சிறிதளவு

செய்முறை:

வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு சின்னவெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.

வெட்டிய காய்கறி, உப்பு, சீனி, மிளகுத்தூள் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கவும். சோயாசாஸ் சேர்த்து கிளறி வெங்காய தாள் தூவி இறக்கவும்.

ஸ்ப்ரிங் ரோல் ஷீட் மீது இக்கலவையில் ஒரு மேசைக்கரண்டி அளவு வைத்து சுருட்டி ஓரங்களை மைதா தண்ணீர் கலவையால் ஒட்டி சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

குறிப்புகள்:

ஸ்ப்ரிங் ரோல் ஷீட்டை ஃப்ரீசரில் இருந்து எடுத்து ஈரமான டவலில் சுற்றி வைக்கவும். இல்லையென்றால் ஷீட் காய்ந்து சுருட்ட வராது.