சைனீஸ் நூடுல்ஸ் (1)
தேவையான பொருட்கள்:
அரிசி நூடுல்ஸ் - ஒரு பாக்கெட் (400 கிராம்) இறால் - கால் கிலோ வெங்காயம் - ஒன்று செலரி (நறுக்கியது) - ஒரு கப் கேரட் - ஒன்று முளைக்கட்டிய பயறு - 200 கிராம் வெங்காய தாள் பொடியாக நறுக்கியது - ஒரு மேஜைக்கரண்டி சோயா சாஸ் - 2 மேஜைக்கரண்டி சன் ஃபிளவர் ஆயில் - 2 மேஜைக்கரண்டி சைனீஸ் எள் எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி அஜினோ-மோட்டோ - 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் இறாலை கழுவி சுத்தம் செய்துக்கொள்ளவும்
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கேரட்டை துருவிக்கொள்ளவும். செலரி
வெங்காய இலைகளையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். (காய்கறிகளை எப்பொழுதும் அரியும் முன்பே கழுவிக்கொள்ளவும். இதனால் அதன் சத்து வீணாகாது.)
பின்பு ஒரு பெரிய சட்டியில் முக்கால் பாகம் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். கொதி வந்த பின்பு அதில் நூடுல்ஸை போடவும்.
3 நிமிடங்கள் வெந்தபின்பு எடுத்து நீரை வடிகட்டவும். பிறகு அதில் குளிர்ந்த நீரை ஊற்றி நன்கு அலசிவிடவும்.
நீர் வடிந்தபின்பு
சிறிது எண்ணெய் ஊற்றி நூடுல்ஸ் அனைத்திலும் படுமாறு தடவி வைக்கவும்.
அதன்பிறகு ஒரு வாயகன்ற நான் ஸ்டிக் தவாவில் சன் ஃபிளவர் ஆயில் விட்டு
நறுக்கின வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கிய பின்பு இறாலை சேர்த்து அரை நிமிடம் வதக்கவும்.
அத்துடன் முளைக்கட்டிய பயறு
துருவின கேரட்
நறுக்கின செலரி ஆகியவற்றைப் போட்டு நன்றாக கிளறவும்.
பின்பு அதில் சோயா சாஸ் விட்டு நன்றாக கிளறவும். லேசான தீயில் அடி பிடிக்காமல் வேகவிடவும். சற்று வெந்ததும் அஜினோ மோட்டோ சேர்க்கவும்(நீர் சேர்க்கக்கூடாது).
காய்கள் அனைத்தும் வெந்தபிறகு நூடுல்ஸை உதிர்த்துப் போட்டு நன்றாக கிளறவும்.
கடைசியாக நறுக்கின வெங்காய இலை
எள் எண்ணெய் விட்டு கிளறி இறக்கவும்.
சுவையான சைனீஸ் நூடுல்ஸ் தயார். ஃபிஷ் சாஸ் அல்லது டொமாட்டோ சாஸ் உடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.