சைனீஸ் நூடுல்ஸ்
தேவையான பொருட்கள்:
ட்ரைடு நூடுல்ஸ் - ஒரு பாக்கெட் வெங்காயம் - ஒன்று கேரட் - ஒன்று பச்சை
சிகப்பு குடை மிளகாய் - பாதி பீஃப் கறி - ஒரு கோப்பை காளான் - கொஞ்சம் சோயா சாஸ் - தேவையான அளவு அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி ஆலிவ் ஆயில் - 3 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். கேரட்டை நீள நீளமாக கீறி கொள்ளவும். மிளகாயை கட்டமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
சுடுநீரில் தேவையான அளவு நூடுல்ஸை போட்டு வேக விடவும்.
வெந்த நூடுல்ஸை வடிகட்டியில் வடிகட்டி வைக்கவும்.
ஒரு அகலமான கடாயில் பீஃபை போட்டு அதனுடன் உப்பு
மிளகு தூள் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வேக விட்டு ஒரு கோப்பையில் தனியே எடுத்து வைக்கவும்.
அதே கடாயில் ஆலிவ் ஆயில் கொஞ்சம் ஊற்றவும். அதில் குடைமிளகாயை போட்டு வதக்கவும்.
மிளகாய் வதங்கியதும் கேரட் மற்றும் காளானை போட்டு வதக்கவும்.
அனைத்தும் வதங்கிய பின் சோயா சாஸ் ஊற்றவும்.
பின் வெங்காயம் மற்றும் வேக வைத்த பீஃபை போடவும். அதில் சிறிது மிளகுதூள்
அஜினோமோட்டோ
தேவையான உப்பும் சேர்க்கவும்.
ஒரு அகலமான தட்டில் வேக வைத்த நூடுல்ஸை சுற்றிலும் வைத்து அதன் நடுவே தயார் செய்து வைத்துள்ள பீஃப் கலவையை வைத்து சுடச்சுட பரிமாறவும்.