சைனீஸ் சிக்கன் ஸ்பிரிங் ரோல் (1)
தேவையான பொருட்கள்:
ஸ்பிரிங் ரோல் ஷீட் (spring roll sheet) - 15
எலும்பு நீக்கிய கோழி - 1/4 கப் (வேக வைத்து மெல்லியதாக வெட்டியது)
துருவிய கேரட்- 1/4 கப்
காளான் - 1/4 கப் (மெல்லியதாக வெட்டியது)
சின்னவெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 4 பல் (பொடியாக வெட்டியது)
இஞ்சி - 1 சிறுதுண்டு (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
வெங்காயத்தாள் - 2 தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
வெள்ளை மிளகுதூள் - 1 தேக்கரண்டி (கறுப்புமிளகுதூளும் சேர்க்கலாம்)
சோயா சாஸ் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சீனி - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு
ஓரங்களை ஒட்ட:
மைதா - 1 மேசைக்கரண்டி
தண்ணீர் - சிறிதளவு
செய்முறை:
வாணலியில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
வெட்டிய கேரட், கோழி, காளான், உப்பு, சீனி, மிளகுத்தூள் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கவும்.
சோயா சாஸ் சேர்த்து கிளறி வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.
ஸ்ப்ரிங் ரோல் ஷீட் மீது இக்கலவையில் 1 மேசைக்கரண்டி அளவு வைத்து சுருட்டி ஓரங்களை மைதா தண்ணீர் கலவையால் ஒட்டி சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
குறிப்புகள்:
ஸ்ப்ரிங் ரோல் ஷீட்டை ஃப்ரீசரில் இருந்து எடுத்து ஈரமான டவலில் சுற்றி வைக்கவும். இல்லையென்றால் ஷீட் காய்ந்து சுருட்ட வராது.