சைனீஸ் சிக்கன் ஸ்பிரிங் ரோல்
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 100 கிராம்
முட்டை கோஸ் - அரை கப்
கேரட் - கால் கப்
கேப்ஸிகம் - இரண்டு மேசைக்கரண்டி
ஒயிட் பெப்பர் - ஒரு தேக்கரண்டி
சோயா சாஸ் - ஒரு டிராப்
உப்பு - தேவையான அளவு
ஸ்பிங் ஆனியன் - ஒரு ஸ்டிக் (இரண்டு மேசைக்கரண்டி)
பூண்டு - இரண்டு பல்
பட்டர் - ஒரு தேக்கரண்டி
சர்க்கரை - அரை தேக்கரண்டி
செய்முறை:
சிக்கன், காய்கறி, பூண்டு அனைத்தையும் துருவிகொள்ளவும் (அ) ப்ளெண்டரில் தனித்தனியாக போட்டு வைக்கவும்.
ஒரு பானில் பட்டரை உருக்கி அதில் சர்க்கரை, பூண்டை போட்டு வதக்கவும்.
பிறகு சிக்கன் துருவல் போட்டு வதக்கவும். வெந்ததும் காய்கறிகள், சோயா சாஸ், உப்பு, ஒயிட் பெப்பர் போட்டு வதக்கவும்.
இரண்டு மூன்று நிமிடம் வதக்கினால் போதும். வதக்கிய கலவையை ஆறவிடவும்.
இப்போது ரோல் தயாரிப்பது:
மைதா, உப்பு சேர்த்து தளர பிசையவும். அதை சப்பாத்தி போல் மிக மெல்லியதாக இடவும்.
அதை சதுர வடிவமாக வெட்டவும்.
இதே போல் எவ்வளவு தேவையோ அதனை நல்ல மாவு தேய்த்து இட்டு அதை லேசாக தவாவில் சூடுப்படுத்தி ஆறவிடவும்.
இப்போது ஷீட் தயார். அதில் கலவையை வைத்து இரண்டு புறமும் மடித்து பிறகு ரோல் செய்யவும். மைதா பேஸ்ட் சிறிது குழைத்து கடைசியில் ஒட்டவும்.
இதை எண்ணெயில் பொரித்தெடுகவும்.
குறிப்புகள்:
பெரிய பெரிய பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் போனதும் ஸ்டார்ட்ஸ் சாப்பிட இந்த சைனீஸ் சிக்கன் ஸ்பிரிங் ரோல் தான் கொடுப்பார்கள்.
இதே சிக்கன் இல்லாமல் வெஜ்ஜாகவும் செய்யலாம். இதே இந்த ரோல் துபாய் மற்றும் வெளிநாடுகளில் ரெடி மேட் கிடைக்கிறது அதிலும் செய்யலாம். சைனீஸ் அயிட்டத்தில் அஜின மோட்டோ சேர்ப்பார்கள். அது கெடுதல் என்று தெரிந்ததிலிருந்து நான் சேர்ப்பது கிடையாது.
பயன் படுத்துபவர்கள் அதை ஒரு பின்ச் பயபடுத்தினால் போதும்.
இதே இந்த ரோல் துபாய் மற்றும் வெளிநாடுகளில் ரெடி மேட் கிடைக்கிறது அதிலும் செய்யலாம்.