சைனீஸ் காய்கறி பக்கோடா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முட்டை கோஸ் - 150 கிராம்

கேரட் - 100 கிராம்

வெங்காயம் - 2

பச்சை குடை மிளகாய் - ஒன்று

சிகப்பு குடை மிளகாய் - ஒன்று

மிளகாய் சாஸ் - 2 டீஸ்பூன்

சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்

தக்காளி சாஸ் - அரை டேபிள்ஸ்பூன்

இன்ஸ்டண்ட் வெஜிடபிள் பவுடர் - அரை ஸ்பூன்

இனிப்பில்லாத ரஸ்க் தூள் - 2 டேபிள் ஸ்பூன்

சோளமாவு - ஒரு டேபிள் ஸ்பூன்

கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்

மைதா - அரை டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - அரை லிட்டர்

உப்பு - ஒரு ஸ்பூன்

செய்முறை:

முட்டைகோஸ், கேரட்டை மெல்லிய குச்சிகளாக நறுக்கவும். வெங்காயத்தையும் பச்சை, சிகப்பு குடை மிளகாய்களையும் சற்று மெல்லிய வட்டங்களாக நறுக்கிக்கொள்ளவும்.

இவையனைத்தையும் 1/2 மணி நேரம் ஃபிரிட்ஜில் மூடி போடாத பாத்திரத்தில் திறந்து வைக்கவும்.

பிறகு அத்துடன் (இன்ஸ்டண்ட்) வெஜிடபிள் பவுடர், சாஸ் வகைகள், உப்பு சேர்த்து கலந்து மீண்டும் சுமார் 15 நிமிடங்கள் ஃபிரிட்ஜில் வைக்கவும்.

பிறகு எடுத்து ரஸ்க் தூள், மாவு வகைகளை சேர்த்து பக்கோடா மாவு பதத்திற்கு பிசைந்துக்கொண்டு, எண்ணெய் சூடானவுடன் அதில் பிசறி விட்டு பொன்னிறமானவுடன் எடுத்து, எண்ணெய் வடிந்தவுடன் பரிமாறவும்.

குறிப்புகள்:

இதை சூடாகவும் பரிமாறலாம். அல்லது அடிக்கடி செய்ய விரும்பினால், சற்று ஆறிய பிறகு ஒரு டப்பாவில் போட்டு 2,3 நாட்கள் வரை வைத்தும் சாப்பிடலாம். சோயா சாஸ், உப்பு சேர்க்கப்பட்டதாக இருந்தால், உப்பின் அளவை அதற்கேற்றாற்போல் குறைத்துக் கொள்ளவும்.