சைனீஸ் கறி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆட்டு இறைச்சி எலும்புடன் - கால் கிலோ

உருளைக்கிழங்கு - 100 கிராம்

கேரட் - 100 கிராம்

சிகப்பு மொச்சை - 50 கிராம்

பச்சை பட்டாணி - 50 கிராம்

தக்காளி பேஸ்ட் - 2 மேசைக்கரண்டி

குழம்பு மசாலாத் தூள் - 2 தேக்கரண்டி

மிளகாய்பொடி - ஒரு தேக்கரண்டி

எலுமிச்சை இழை - 8

உப்பு - தேவையான அளவு

அஜினோமோட்டோ - 2 சிட்டிகை

செய்முறை:

முதலில் மொச்சையை 2 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் இட்டு வேக வைக்கவும். பின்பு தண்ணீரை வடிகட்டவும்.

பின்பு குக்கரில் இறைச்சியை கழுவி போடவும். சுமார் ஒரு லிட்டர் தண்ணீர் விடவும். பின்பு அதில் குழம்பு தூளையும் தேவையான அளவு உப்பு சேர்த்து வேக விடவும்.

15 நிமிடம் வெந்தபின்பு, அதில் மொச்சைக்கொட்டை பட்டாணி, உருளை, கேரட், தக்காளி பேஸ்ட் மிளகாய்பொடி ஆகியவற்றை போட்டு வேக விடவும்.

காய்கள் பாதி வெந்ததும் அதில் எலுமிச்சைஇலை அஜினோமோட்டோ ஆகியவற்றை சேர்க்கவும். பின்பு நன்கு கொதித்த பின்பு இறக்கவும்.

குறிப்புகள்:

இது ஒரு வியட்நாம் கறி, இதன் பெயர் லஹூ. இது ஃபிரெஞ்சு ரொட்டி அல்லது சப்பாத்திக்கு ஏற்றது.