சைனீஸ் எக் ரோல்ஸ்
தேவையான பொருட்கள்:
ரெடிமேட் எக்ரோல் ஷீட்ஸ் - ஒரு பொதி
சிக்கன் - கால்கிலோ
இறால் - நூறு கிராம்
சைனீஸ் கேபேஜ் - இரண்டு கோப்பை
முளைவிட்ட பச்சைப்பயிறு - இரண்டுகோப்பை
வெங்காயத்தாள் - கால் கோப்பை
உலர்ந்த காளான் - ஐந்து
நறுக்கிய பேம்போ ஷூட்ஸ் - அரைக்கோப்பை
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - இரண்டு பற்கள்
சிக்கன் ஸ்டாக் - கால் கோப்பை
சோளமாவு - இரண்டு தேக்கரண்டி
சோயா சாஸ் - ஒரு மேசைக்கரண்டி
உப்புத்தூள் - அரைதேக்கரண்டி
மிளகுத்தூள் - அரைதேக்கரண்டி
முட்டை - ஒன்று
எண்ணெய் - இரண்டு கோப்பை
செய்முறை:
மீனை சுத்தம் செய்து உப்பு, மஞ்சள்தூள் போட்டு வேகவைத்து, முள்ளை எடுத்துவிட்டு உதிர்த்துக் கொள்ளவும்.
வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி ஆகியவற்றை நறுக்கி சிறிது எண்ணெயில் வதக்கி மீனுடன் சேர்க்கவும்.
மிளகுத்தூளையும், எலுமிச்சை ரசத்தையும் மீன் கலவையில் சேர்க்கவும்.
தேவைப்பட்டால் ஒரு மேசைக்கரண்டி ரொட்டித்துள் சேர்க்கவும்.
எல்லாவற்றையும் சேர்த்து ஒரு சிட்டிகை உப்புதூளைத்தூவி நன்றாக கலந்துக் கொள்ளவும். முட்டையை அடித்துவைத்துக் கொள்ளவும்.
பிறகு மீன் கலவையிலிருந்து சிறிதளவு எடுத்து வட்டமாக தட்டி முட்டையில் நனைத்து ரொட்டித்தூளில் பிரட்டி எடுக்கவும்.
எண்ணெயை சுடவைத்து அனலை குறைத்துவைத்து கொண்டு கட்லெட்டை போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
தோசைக்கல்லிலும் போட்டு சிறிதளவு எண்ணெய் ஊற்றி இருபுறமும் சிவக்கச்செய்து எடுத்து பரிமாறலாம்.
குறிப்புகள்:
ரெடிமேட் எக்ரோல் ஷீட்ஸ் பொதுவாக ஃப்ரோசன் செக்ஷனில் தான் வைத்திருப்பார்கள். சதுரமான வடிவத்தில் இருக்கும். பொதியின் அளவிற்க்கேற்ப்ப அதன் எண்ணிக்கைகள் இருக்கும்.இந்த குறிப்பிற்க்கு குறைந்தது இருபது இருக்க வேண்டும். ஆகவே ஒரு பாக்கட் வாங்கினால் சரியாக இருக்கும்.இந்த குறிப்பை செய்வதற்க்கு முன் தினம் ஃபிரீசரிலிருந்து எடுத்து ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் சுருட்டுவதற்க்கு நல்ல பதமாக இருக்கும்.மேலும் நிரப்புவதற்க்கு பிடித்தமான காய்கறிகளையும், இறைச்சியையும் சேர்த்துக் கொள்ளலாம்.