சைனீஸ் இறால் வறுவல் (1)
தேவையான பொருட்கள்:
இறால் - 15 எண்ணம் (ஒரு ஆள்காட்டி விரல் நீளம் மீன் இருக்க வேண்டும்)
சோளமாவு - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 3/4 டீஸ்பூன்
நல்லமிளகுத்தூள் - 3/4 டீஸ்பூன்
வினிகர் - 1/2 டீஸ்பூன்
சோயாசாஸ் - 3/4 டீஸ்பூன்
வெங்காயத்தழை - 1/2 கப் (பொடிப்பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
முதலில் இறாலின் தலை மற்றும் வால் பகுதியயை கட் செய்யவும். பிறகு இறாலின் மேல் பகுதியில் இருக்கும் கருப்பு லைன் போல இருக்குமே அதை மாற்றவும்.
மறுமுறையும் நன்றாக கழுவவும். கழுவின மீனின் தண்ணீர் போக உலர விடவும்.
ஒரு பாத்திரத்தில் சோளமாவு, மிளகாய்தூள், நல்லமிளகுத்தூள், இஞ்சிபூண்டு விழுது, வினிகர், சோயாசாஸ் மற்றும் தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
கலந்த கலவையினுள் இறாலை போட்டு பிசறி வைக்கவும். ஒரு மணி நேரம் ஊறவிடவும்.
ஒரு வாணலியில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் விட்டு அது சூடு ஆனவுடன் இறாலை இரண்டு, மூன்றாகப் போட்டு பொரித்தெடுக்கவும். சைனீஸ் இறால் வறுவல் தயார்.
குறிப்புகள்:
இப்படி இறாலை ஊறவைத்ததை குச்சியில் குத்தி சுட்டுத்தருவார்கள் அதுதான் கபாப் முறையில் மற்றபடி குச்சியில் குத்தி அதை ஒரு சில்வர் ராப்பரில் சுற்றி அதை மைக்ரோவேவ்வில் வேகவைத்தும் சாப்பிடுவார்கள்.