சைனீஸ் இறால் வறுவல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இறால் - 15 எண்ணம் (ஒரு ஆள்காட்டி விரல் நீளம் மீன் இருக்க வேண்டும்) சோளமாவு - 2 மேசைக்கரண்டி இஞ்சி

பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி மிளகாய்த் தூள் - முக்கால் தேக்கரண்டி மிளகுத் தூள் - முக்கால் தேக்கரண்டி வினிகர் - அரை தேக்கரண்டி சோயா சாஸ் - முக்கால் தேக்கரண்டி வெங்காயத் தாள் - அரை கப் (பொடியாக நறுக்கியது) உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

இறாலின் தலை மற்றும் வால் பகுதியை நறுக்கி விட்டு அதன் மேல் பகுதியில் இருக்கும் கருப்பு கோடு போல இருப்பதை அகற்றவும். மறுமுறையும் நன்றாக கழுவி தண்ணீரை உலர விடவும்.

ஒரு பாத்திரத்தில் சோளமாவு

மிளகாய்த் தூள்

மிளகுத் தூள்

இஞ்சி பூண்டு விழுது

வினிகர்

சோயா சாஸ் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

கலந்து வைத்திருக்கும் கலவையில் இறாலை போட்டு பிசறி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

வாணலியில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இறாலை இரண்டு

மூன்றாகப் போட்டு பொரித்தெடுக்கவும்.

சுவையான சைனீஸ் இறால் வறுவல் தயார்.

குறிப்புகள்: