சைனீஸ் ஃபிரைட் ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வேகவைத்த லாங்கிரைன் ஒயிட் ரைஸ் - நான்கு கோப்பை

வெங்காயத்தாள் - நான்கு

நசுக்கிய பூண்டு - ஒரு மேசைக்கரண்டி

நசுக்கிய இஞ்சி - ஒரு மேசைக்கரண்டி

முட்டை - நான்கு

சுத்தமான நறுக்கிய இறால் - கால்கிலோ

சோயா சாஸ் - மூன்று மேசைக்கரண்டி

ரைஸ் வைன் வினிகர் - மூன்று மேசைக்கரண்டி

ஓயிஸ்டர் சாஸ் - இரண்டு மேசைக்கரண்டி

வெள்ளை மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி

உப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி

ஸெஸமி ஆயில் - ஒரு மேசைக்கரண்டி

சர்க்கரை - இரண்டு தேக்கரண்டி

கடலெண்ணெய் - கால் கோப்பை

காய்கறி கலவை - ஒரு கோப்பை

செய்முறை:

முதலில் ஒரு சிறிய கோப்பையில் சோயாசாஸ், ரைஸ் வைன் வினிகர், ஒயிஸ்டர் சாஸ், ஸெஸமி ஆயில், சர்க்கரை, அரைதேக்கரண்டி உப்பு, ஒரு சிட்டிகை வெள்ளை மிளகுத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.

முட்டைகளை உடைத்து ஒரு கோப்பையில் ஊற்றி சிறிது உப்பு, மிளகுத்தூளைப் போட்டு நன்கு அடித்து வைக்கவும்.

வாயகன்ற சட்டியை காயவைத்து சிறிது எண்ணெயை ஊற்றி அடித்து வைத்துள்ள முட்டைக் கலவையை ஊற்றி ஆம்லட்டாக சுட்டு எடுத்து, அதை சிறிய துண்டுகளாக்கி வைக்கவும்.

பிறகு அதே சட்டியை அடுப்பில் வைத்து மீதியுள்ள எண்ணெயை ஊற்றவும். அதில் பூண்டு இஞ்சியை முதலில் போட்டு வதக்கி இறால் துண்டுகளைப் போடவும்.

அதைத் தொடர்ந்து காய்கறிகளைப் போட்டு வதக்கி விடவும். அவைகள் அரைவேக்காடாக ஆனதும் வேகவைத்த சோற்றை கொட்டி கிளறவும்.

சோறு நன்கு சூடேறியதும் தயாரித்து வைத்துள்ள சோயா சாஸ் கலவையை ஊற்றி நன்கு கிளறி விடவும்.

பிறகு மீதியுள்ள உப்பு, மிளகுத்தூளை போட்டு கிளறி விடவும். அதைத் தொடர்ந்து நறுக்கிய வெங்காயத்தாளையும், முட்டை துண்டுகளையும் சேர்த்து நன்கு கிளறி விடவும்.

பின்பு மீண்டும் உப்பையும், காரத்தையும் சரி பார்த்து தேவையென்றால் மேலும் சேர்த்து கிளறி விட்டு இறக்கி, கோப்பைகளில் போட்டு சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: