செஷ்வான் வெஜ் ஃப்ரைட் ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வடித்த சாதம் - 4 கப் காரட் - 2 முட்டைக்கோஸ் - கால் பகுதி பீன்ஸ் - 20 குடை மிளகாய் - ஒன்று வெங்காயம் - பாதி இஞ்சி - சிறிய துண்டு பூண்டு - 5 பல் காய்ந்த மிளகாய் - 2 செஷ்வான் சாஸ் - 3 தேக்கரண்டி சோயா சாஸ் - ஒரு தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தாளிக்க மல்லி இலை - கைப்பிடி

செய்முறை:

காய் கறிகளை மிகவும் பொடியாக ஒரே அளவாக நறுக்கவும். இஞ்சி மற்றும் பூண்டை மிக சிறியதாக நறுக்கி வைக்கவும். வடித்த சாதத்தை ஒரு தட்டில் பரப்பி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய்

நறுக்கிய இஞ்சி

பூண்டு சேர்த்து வதக்கவும்.

அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கி விட்டு செஷ்வான் சாஸ் சேர்க்கவும்.

பின்னர் காய்கறிகளை கொட்டி சோயா சாஸ் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வதக்கவும்.

காய்கறி கலவையுடன் வடித்த சாதத்தை சேர்த்து தேவைப்பட்டால் உப்பு போட்டு கிளறவும். மல்லி இலை தூவி பரிமாறவும்

சுவையான வெஜிடபுள் செஷ்வான் ஃப்ரைட் ரைஸ் தயார். அசைவம் விரும்புபவர்கள் இத்துடன் சிக்கன் அல்லது இறால் சேர்த்தும் செய்யலாம்.

குறிப்புகள்: