செஷ்வான் சிக்கன்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் எலும்பில்லாது - 200 கிராம்

பெரிய பூண்டு - மூன்று பல் (அரைத்து கொள்ளவும்)

காய்ந்த மிளகாய் - ஒரு தேக்கரன்டி ( வறுத்து திரித்து கொள்ளவும்)

மேகி சிக்கன் க்யூப் - அரை

டொமேட்டோ பேஸ்ட் - 200 கிராம்

உப்பு - ஒரு தேக்கரண்டி (தேவையான அளவு)

பட்டர் - 50 கிராம்

கறிவேப்பிலை - ஒரு கை பிடி

குடை மிளகாய் - அரை பாகம் (பொடியாக நறுக்கவும்)

செய்முறை:

காய்ந்த மிளகாயை லேசாக வறுத்து காய்ந்த மிக்ஸியில் திரித்து கொள்ள வேண்டும்.

சிக்கனை கழுவி பொடி துண்டுகளாக நறுக்கி அதில் பொடி செய்த காய்ந்த மிளகாய், அரைத்த பூண்டு, டொமேட்டோ பேஸ்ட், மேகி க்யூப், உப்பு சேர்த்து பத்து நிமிடம் ஊறவைக்கவும்.

சட்டியை காய வைத்து பாதி பட்டரை போட்டு அதில் ஊற வைத்த சிக்கனை போட்டு வேக வைக்க வேண்டும்.

வெந்ததும் அதில் தனியாக ஒரு வாணலியில் மீதி உள்ள பட்டரை உருக்கி அதில் குடை மிளகாயையும் கறிவேப்பிலையையும் அதில் வறுத்து வேக வைத்த சிக்கன் மேலே ஊற்றி கலக்க வேண்டும்.

குறிப்புகள்:

இது செய்வது ரொம்ப சுலபம். இது ப்ரைடு ரைஸுக்கும், பரோட்டாவிற்கும் நல்ல காம்பினேஷன்.