செஷ்வான் சாஸ்
தேவையான பொருட்கள்:
வர மிளகாய் - 20 தக்காளி - 4 டொமேட்டோ கெட்சப் - 2 மேசைக்கரண்டி பூண்டு - 15 பல் இஞ்சி - ஒரு அங்குல துண்டு. சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி கொத்தமல்லித் தழை - சிறிது எண்ணெய் - 3 மேசைக்கரண்டி சர்க்கரை - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
வரமிளகாயை விதை நீக்கி சூடான தண்ணீரில் போட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
இஞ்சி
பூண்டு மற்றும் கொத்தமல்லி தண்டினை மிகவும் பொடியாக நறுக்கி (finely chop) வைக்கவும். தக்காளியை தோல் நீக்கி அரைத்து வைக்கவும். ஊறிய வரமிளகாயை விழுதாக அரைத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டு
இஞ்சி மற்றும் கொத்தமல்லி தண்டு சேர்த்து வதக்கவும்.
அவை நன்கு வதங்கியதும் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வைக்கவும்.
அதனுடன் அரைத்த மிளகாய் விழுது மற்றும் சோயா சாஸ் சேர்த்து வதக்கி பச்சை வாசனை அடங்கும் வரை வேக விடவும்.
கடைசியாக தக்காளி சாஸ்
சர்க்கரை சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வரை அடுப்பில் வைத்திருக்கவும்.
செஷ்வான் சாஸ் தயார். இது இந்தோ சைனீஸ் உணவுகள் தயாரிப்பிற்கு பயன்படுத்தும் ஒரு வகை சாஸ். பாட்டிலில் அடைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். இதற்கு அதிக எண்ணெய் சேர்த்திருப்பதால் 2 வாரம் வரை வைத்திருந்து உபயோகிக்கலாம்.