செலரி காரட் பொரியல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

செலரி - ஒரு கட்டு கேரட் - 2 பெரிய வெங்காயம் - பாதி மிளகு தூள் - அரை மேசைக்கரண்டி உப்பு - தேவைக்கு எண்ணெய் - தாளிக்க தாளிக்க: கடுகு - சிறிது சீரகம் - ஒரு மேசைக்கரண்டி கடலை உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி பச்சை மிளகாய் - 2 கறிவேப்பிலை - 5 இதழ்

செய்முறை:

காரட்டை வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். செலரியை கழுவி தண்டின் பின்

மேற்புறத்தில் இருந்து தண்டின் நுனி வரை இருக்கும் நாரினை கத்தியால் உரித்து எடுத்து செலரியை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை நீளமாக நறுக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை போட்டு தாளிக்கவும்.

பின் நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

அதில் காரட்டை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து வேக விடவும்.

5 நிமிடம் கழித்து பொடியாக நறுக்கிய செலரியை உப்புடன் சேர்த்து 10 நிமிடம் வேக வைக்கவும்.

சத்தான செலரி பொரியல் ரெடி. மிளகாய் தூளை தூவவும். யூஎஸ்ஸில் செலரியை சூப் செய்து குடிப்பார்கள். ஜீரோ கேலரி. மிகவும் சத்தான சைவ உணவு.

குறிப்புகள்: