செர்ரி டொமெட்டோ சாலட் (Cherry Tomato)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

செர்ரி டொமேட்டோ (குட்டி தக்காளி) - 1 பக்ஸ் (குறைந்தது 20 – 25 தக்காளிகள்)

கறிவேப்பிலை - 5 இலை

எண்ணெய் - 1/2 தேக்கரண்டி

பூண்டு - 3

உப்பு - தேவைக்கு

மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி

கொத்தமல்லி, புதினா - சிறிதளவு

செய்முறை:

முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும்.

தக்காளியை இரண்டாக வெட்டி வைக்கவும். பூண்டினை நசுக்கி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நசுக்கி வைத்துள்ள பூண்டினை சேர்த்து வதக்கவும்.

அதன் பின் தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.

பிறகு இத்துடன் மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து மேலும் 1 நிமிடம் வதக்கவும்.

கடைசியில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினாவினை சேர்த்து கிளறவும்.

இப்பொழுது செர்ரி டொமேட்டோ சாலட் ரெடி

குறிப்புகள்:

<br/>

<img src="files/pictures/aa128.jpg" alt="picture" />