செர்ரிப்பழ ஜாம்
தேவையான பொருட்கள்:
செரிப்பழம் - 1 கிலோ
சீனி - 150 - 200 கிராம்
வெனிலா எசன்ஸ் -1 தேக்கரண்டி
செய்முறை:
செரிப்பழத்தின் விதையை நீக்கி சிறிதாக வெட்டுங்கள்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில் வெட்டிய செரிப்பழங்களையும் சீனியையும் சேர்த்து கலக்கவும்.
அடுப்பில் வைத்து காய்ச்சவும். அடிப்பிடிக்கா வண்ணம் அடிக்கடி கிளறிக் கொள்ளவும்.
கலவையை கரண்டியில் எடுத்து விடும் போது கெட்டியாக விழவேண்டும். அப்பொழுது வெனிலா எசன்ஸை விட்டு கிளறி இறக்கவும்.
நன்கு ஆறியதும் பாட்டில்களில் அடைத்து, குளிர்சாதனப் பெட்டில் வைத்து தேவையான போது எடுத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
இங்கு சீனி 150 - 200 கிராம் எனக் கொடுத்திருக்கிறேன் அவரவர் சுவைக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த ஜாமினைப் பயன்படுத்தும் போது உலர்ந்த கரண்டி அல்லது உலர்ந்த கத்தியினைப் பயன்படுத்தினால் நீண்ட நாட்கள் கெடாமால் இருக்கும். சில நாடுகளில் ஜாம் செய்வதற்குரிய சீனி கிடைக்கிறது அதை வாங்கிப் பயன்படுத்தலாம்.