சூப் சாயுர்
தேவையான பொருட்கள்:
கேரட் - ஒன்று (சிறியது) முட்டைகோஸ் - 3 இதழ்கள் பீன்ஸ் - 4 சிறு பூக்களாக உதிர்த்த காலிஃப்ளவர் - முக்கால் கப் மஷ்ரூம் - 6 கடுகு கீரை (அ) முளைக்கீரை - ஒரு கைப்பிடி பச்சை மிளகாய் - ஒன்று (அ) இரண்டு (காரத்திற்கேற்ப) பூண்டு - 7 பல் இஞ்சி - ஒரு இன்ச் அளவு லெங்குவாஸ் (Galangal root) - ஒரு இன்ச் அளவு (ஃப்ரெஷ் சித்தரத்தை) எலுமிச்சை இலை - 3 சோயா சாஸ் - 2 தேக்கரண்டி சர்க்கரை (சீனி) - கால் தேக்கரண்டி வெஜ் ஸ்டாக் க்யூப் - பாதி (விரும்பினால்) எண்ணெய் - 2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு எலுமிச்சை சாறு - சில துளிகள்
செய்முறை:
பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி பொடியாக நறுக்கிய பூண்டு
இஞ்சி
கீறிய பச்சை மிளகாய்
நசுக்கிய லெங்குவாஸ் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
பிறகு சிறு துண்டுகளாக நறுக்கிய கேரட்
பீன்ஸ்
காலிஃப்ளவர்
மஷ்ரூம் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும்.
வதக்கியவற்றுடன் 3 கப் தண்ணீர் ஊற்றி சோயா சாஸ்
சர்க்கரை
வெஜ் ஸ்டாக் க்யூப் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். எலுமிச்சை இலைகளை ஒன்றிரண்டாக பிய்த்து சேர்க்கவும்.
நன்றாக கொதித்து காய்கறிகள் முக்கால் பதம் வெந்ததும் முட்டைகோஸ் மற்றும் கீரையைச் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும்.
சுவையான சூப் சாயுர் (இந்தோனேஷியன் வெஜ் சூப்) தயார். தேவைக்கேற்ப எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும்.