சூஜி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ரவை - ஒரு கப் சர்க்கரை - அரை கப் கன்டண்ஸ்டு மில்க் (இனிப்பு) - அரை டின் வெங்காயம் - ஒன்று கானாமது பாதாம் - 15 உலர் திராட்சை - 15 நெய் - 2 மேசைக்கரண்டி பந்தன் / ரம்பை இலை - 4 துண்டுகள்

செய்முறை:

ரவையை வாசம் வரும் வரை வறுக்கவும்.

பாத்திரத்தில் நெய் விட்டு ரம்பை இலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சிவந்ததும்

பாதாம் மற்றும் திராட்சை சேர்த்து பிரட்டவும்.

பின் 4 கப் நீர் விட்டு கொதிக்க விட்டு

ரவை சேர்க்கவும். ரவை வெந்ததும் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.

ரவை வெந்து

சர்க்கரையுடன் கலந்து கூழ் பதம் வரும் போது கன்டண்ஸ்டு மில்க் சேர்த்து

அரை டின் நீர் ஊற்றி கலந்து கொதிக்க விடவும்.

சுவையான மாலத்தீவு இனிப்பு சூஜி தயார்.

குறிப்புகள்: