சுவிஸ் சார்ட் கூட்டு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சுவிஸ் சார்ட் கீரை - ஒரு கட்டு மசூர் தால் - 50 கிராம் பச்சை மிளகாய் - ஒன்று மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி மிளகு

சீரகத் தூள் - கால் தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு தாளிக்க: கடுகு

சீரகம் - சிறிதளவு வெங்காயம் - ஒன்று பூண்டு - 3 பல் சோம்பு தூள் - கால் தேக்கரண்டி கறிவேப்பிலை

எண்ணெய்

செய்முறை:

மசூர் தாலில் சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

சுவிஸ் சார்ட் கீரையை நன்கு சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும்.

வேக வைத்த மசூர் தாலுடன் சுவிஸ் சார்ட் கீரை

நறுக்கிய பச்சை மிளகாய்

மஞ்சள் தூள்

மிளகு

சீரகத் தூள் மற்றும் உப்புச் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

கீரை வெந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து

கீரைக் கலவையில் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

சுவையான சுவிஸ் சார்ட் கூட்டு தயார்.

குறிப்புகள்: