சுலைமானி வித் சப்ரான் (சளிக்கு)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தண்ணீர் - நான்கு டம்ளர்

சர்க்கரை - ஐந்து டீஸ்பூன்

டீ தூள் - ஒரு டீஸ்பூன்

சப்ரான்(குங்குமப்பூ) - எட்டு இதழ்

செய்முறை:

தண்ணீரை கொதிக்க வைத்து அதில் டீ தூளை போடவும்.

கொதிவந்து டீ தூள் இறங்கியதும் அதை வடிக்கட்டி சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

பிறகு நான்கு கப்பில் டீயை ஊற்றி விட்டு ஒவ்வொரு கப்பிலும் இரண்டு இரண்டு இதழ் சப்ரானை போட்டு குடிக்கவும்.

குறிப்புகள்:

இது சளி தொல்லை உள்ளவர்களுக்கு அனைவருக்கும் ஒரு அருமருந்து. அரேபியர்கள் பெரும்பாலும் விரும்பி குடிப்பது சுலைமானி டீ தான்.

வெளி நாடுகளில் டீ பேக் தான் உபயோகப்படுத்துவார்கள். நான்கு கப் சுலைமானிக்கு இரண்டு டீ பேக்குகள் போதுமானது. இது கொஞ்சம் லைட்டாக இருந்தால் தான் நன்றாக இருக்கும்