சுர்ரோஸ் (1)
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 100 கிராம்
தண்ணீர் - 100 கிராம்
உப்பு - ஒரு சிட்டிகை
ஐஸிங் சர்க்கரை மேலே தூவுவதற்கு
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை:
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக்கொள்ளவும். தண்ணீரை உப்பு போட்டு கொதிக்க வைத்து மாவில் விட்டு ஒரு மரக்கரண்டியால் கிண்டவும்.
பின்பு அதை கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ளவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடேற்றவும்.
இந்த மாவு கலவையை முறுக்கு உரலில் போட்டு இதற்கு ஸ்டார் அச்சு அதுவும் ஸ்டார் பெரிய அளவில் இருக்கும் படியான அச்சில் போட்டு நேரடியாக எண்ணெயில் பிழியவும் 8 அங்குல அளவில் பிழிந்து பின்பு அதை கத்தியால் வெட்டி விடவும்.
மிதமான தீயில் வெந்தவுடன் எடுத்து ஒரு டிஸ்யூ பேப்பரில் வைத்து அதன் மேல் ஐஸிங் சர்க்கரை தூவவும் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
குறிப்புகள்:
இது ப்ரான்ஸில் பிரசித்தமான ஒரு பதார்த்தம் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். பொது மக்கள் கூடும் திருவிழா மற்றும் சந்தை போன்ற இடங்களில் சூடாக செய்து ஒரு கொரணையில் போட்டு தருவார்கள் ரொம்பவும் சுவையாக இருக்கும் செய்வது சுலபம். இதற்கு இங்கு சாக்லேட் பேஸ்ட்டும்(nutella)தொட்டு சாப்பிடுவார்கள்.