சுர்ரோஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 100 கிராம் தண்ணீர் - 100 கிராம் உப்பு - ஒரு சிட்டிகை ஐஸிங் சர்க்கரை - மேலே தூவுவதற்கு எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை:

மைதா மாவை சலித்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க வைக்கவும்.

மைதா மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றி கட்டி இல்லாமல் மரக்கரண்டியை வைத்து கிளறி விடவும்.

அதன் பிறகு கிளறிய மாவை நன்கு முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து உருண்டையாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பிசைந்த மாவை முறுக்கு உரலில் பெரிய ஸ்டார் வடிவில் இருக்கும் அச்சியை போட்டு சூடாக இருக்கும் எண்ணெயில் 8 அங்குல அளவில் பிழிந்து பின்பு அதை கத்தியால் வெட்டி விடவும்.

தீயை மிதமாக வைத்து

பொன்னிறமாக மாறி வெந்ததும் எடுத்து விடவும்.

வெந்ததும் எடுத்து டிஷு பேப்பரில் சிறிது நேரம் போட்டு வைக்கவும்.

சுவையான சுர்ரோஸ் தயார். பரிமாறும் போது அதன் மேல் ஐஸிங் சர்க்கரையை தூவி பரிமாறவும். சூடாக சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். பிரான்ஸில் வசித்து வரும் திருமதி. ரஸியா இஸ்லாமிய உணவுகள்

சைனீஸ்

பிரெஞ்சு உணவுகள் என்று அனைத்திலும் அசத்தக் கூடியவர். ஏராளமான வித்தியாசமான குறிப்புகளைக் கொடுத்துள்ளார். இங்கே சுர்ரோஸ் என்ற ஒரு வித்தியாசமான செய்முறையை படங்களுடன் விளக்கியுள்ளார் நீங்களும் செய்து பார்த்து கருத்தினை தெரிவிக்கவும்.

குறிப்புகள்: