சுண்டங்கத்தரிக்காய் வற்றல் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 1 (பெரியது)

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - 2 நெட்டு

தக்காளி – 1 (பெரியது)

உள்ளி- 10 பல்

இஞ்சி- சிறிய துண்டு

கடுகு- 1/2 டீஸ்பூன்

பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்

நற்சீரகம் - 1/2 டீஸ்பூன்

வெந்தயம் - 1/2 டீஸ்பூன்

புளி- சிறிது

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

கறித்தூள் - 1 டேபிள்ஸ்பூன் ( அல்லது தேவையான அளவு)

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

சுண்டங்கத்தரிக்காய் வற்றல் - 2டேபிள்ஸ்பூன்

செய்முறை:

எல்லாவற்றையும் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும். வெங்காய ம், உள்ளி, இஞ்சியை மெலிதாக வெட்டிக்கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். தக்காளியையும் துண்டுகளாக்கிக்கொள்ளவும்.

சிறிது எண்ணெயை சூடாக்கி, சுண்டங்காய் வத்தலை வதக்கி எடுக்கவும். (கருகி விடாமல் பார்த்துக்கொள்ளவும்).

இன்னொரு சட்டியில், மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி, கடுகு, வெந்தயம், சீரகங்களை போடவும்.

கடுகு பொரிந்ததும், வெட்டி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு உப்பு சேர்க்கவும்.

சில நிமிடங்களின் பின், பச்சை மிளகாய், உள்ளி, இஞ்சி சேர்த்து வதக்கவும்.

எல்லாம் ஒரளவுக்கு வதங்கியதும், கறிவேப்பிலையை போட்டு , எல்லாம் நன்றாக வதங்கும் வரை வதக்கவும்.

எல்லாம் வதங்கியதும், தக்காளியை சேர்க்கவும்.

சில நிமிடங்கள் கழித்து கறித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.

பின்னர், ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

குழம்பு கொதித்ததும், புளி சேர்த்து, குழம்பு சற்று தடிப்பாகும் வரை விடவும். உப்பு சரிபார்த்து, தேவையெனில் சேர்த்துக்கொள்ளவும்.

கடைசியாக வற்றலை சேர்த்து, மீண்டும் சில நிமிடங்கள் கொதிக்க விட்டு அடுப்பில் இருந்து இறக்கவும்.

குறிப்புகள்: