சுக்கினி பொரியல்
தேவையான பொருட்கள்:
சுக்கினி - ஒன்று
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
மஞ்சள்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
சுக்கினியை கழுவி தோலுடன் மேலிருந்து கீழாக ஓரளவு மெல்லிய துண்டுகளாக வெட்டவும்.
வெட்டிய சுக்கினி துண்டுகளை ஒரு தட்டில் அடுக்கி வைக்கவும், ஒரு தட்டில் மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும்.
கலந்த பின்பு அக்கலவையில் வெட்டிய சுக்கினி துண்டு ஒன்றை வைக்கவும்.
வெட்டிய சுக்கினிதுண்டு ஒன்றின் எல்லா பக்கமும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு கலவையை படும்படி நன்றாக பிரட்டி சிறிது நேரம் சுக்கினி துண்டை அதில் ஊறவிடவும்.
அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து சூடாக்கி அதில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் அதில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு கலவையில் ஊறிய சுக்கினி துண்டுகளை போட்டு நன்றாக பொரிக்கவும்.
நன்றாக பொரிந்ததும் அதனை மற்ற பக்கம் திருப்பி போட்டு பொரிக்கவும்.
பின்பு மேலதிகமாக உள்ள எண்ணெயை நன்றாக வடித்து விட்டு ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
இதனை போல மற்றவற்றையும் பொரித்து எடுத்து தட்டில் வைக்கவும்.
சுவையான சத்தான செய்வதற்கு இலகுவான சுக்கினி பொரியல் தயாராகி விட்டது.
ஒருதட்டில் பாண்(ப்ரெட்)துண்டுகள், இடியாப்பம், புட்டு, சோறு(சாதம்)இவற்றில் ஒன்றுடன் சுவையான சத்தான சுக்கினி பொரியலை வைத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
சுக்கினி நீர்சத்துகள், வைட்டமின் சத்துகள் நிறைந்தது. இதனை மேல் நாட்டு மக்கள் விரும்பி உண்பார்கள். அப்படிப்பட்ட சுக்கினியில் செய்யப்பட்ட பொரியல் சத்துகள் நிறைந்தது, செய்வதற்கு இலகுவானது சுவையானது.
கவனிக்க வேண்டிய விசயங்கள் - சுக்கினியை கழுவி தோலுடன் மேலிருந்து கீழாக ஓரளவு மெல்லிய துண்டுகளாக வெட்டவும். மாற்று முறை - இதே முறையில் கத்தரிக்காயிலும் செய்யலாம். மிளகாய்த்தூளுக்கு பதிலாக மிளகுத்தூளை பாவிக்கலாம். எச்சரிக்கை - இருதய நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.