சுக்கினி சிப்ஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சுக்கினி - 1 பெரியது

பார்மஜான் சீஸ் - 1/4 கப்

பிரெட் தூள் - 1/2 கப்

மிளகு தூள் - 1 தேக்கரண்டி

உப்பு - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

முதலில் அவனை 450 F யில் முற்சூடு செய்யவும்.

சுக்கினியை சிறிய சிறிய துண்டுகளாக ஒரே அளவில் வெட்டவும். (விரும்பிய வடிவத்தில் - நீளமாகவே அல்லது வட்ட வடிவம்)

ஒரு பாத்திரத்தில் பார்மஜான் சீஸ், பிரெட் தூள், உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

வெட்டி வைத்துள்ள சுக்கினியை இதில் பிரட்டவும்.

பிறகு பேக்கிங் ட்ரெயில் இந்த சுக்கினியை ஒவ்வொன்றாக சிறிது இடைவெளிவிட்டு வைக்கவும்.

இதனை சுமார் 20 - 25 நிமிடம் அவனில் வைக்கவும்.

இதனை ஏதேனும் சாஸுடன் சுடாக பரிமாறவும்.

இப்பொழுது சுவையான சுக்கினி சிப்ஸ் ரெடி.

குறிப்புகள்:

இது ஒரு மாலை நேர ஸ்நாக்